தேர்தல் நேரத்தில் அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் கர்நாடகாவில் மிப்பெரிய வருமானவரித்துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார். தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தி அரசியல் ரீதியாக பழி தீர்த்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான சி.எஸ்.புட்டராஜூவின் வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறையினர் திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும் புட்டராஜூவிற்கு பெங்களூரு, மாண்டியா, மற்றும் மைசூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள 17 பொதுப்பணித்துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள், மற்றும் நீர்ப்பாசனத்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வீடுகளிலும், வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அமைச்சரின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.