ஊழல் வழக்கில் சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி.. நெருக்கும் நீதித்துறை.. அடுத்து என்ன ?

தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது.

Karnataka Lok Ayugda police register case against Edappadi Palanisamy Sambandi Chandrakanth Ramalingam

பெங்களூரு வளர்ச்சி ஆணையம்(பி.டி.ஏ.) சார்பில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா தொடங்க அனுமதி வழங்கி இருந்தார். இதுதொடர்பான ஒப்பந்த பணிகள் ராமலிங்கம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. 

இந்த கட்டுமான பணிகளை வழங்க, ராமலிங்கம் நிறுவனத்திடம் இருந்து முதல்வராக இருந்த எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவு துறை மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் குற்றச்சாட்டு கூறினார். இதுதொடர்பாக பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் அவர் வழக்கும் தொடர்ந்தார்.

Karnataka Lok Ayugda police register case against Edappadi Palanisamy Sambandi Chandrakanth Ramalingam

மேலும் செய்திகளுக்கு..60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

கோர்ட் ஆனது எடியூரப்பா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து கா்நாடக ஐகோர்ட்டில் ஆபிரகாம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 14-ந் தேதி பி.டி.ஏ குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தவும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. 

பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு நீதிபதி, எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி லோக் அயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. 

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பி.டி.ஏ குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த், கட்டுமான நிறுவன அதிபர் ராமலிங்கம், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

Karnataka Lok Ayugda police register case against Edappadi Palanisamy Sambandi Chandrakanth Ramalingam

வழக்குப்பதிவு செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி தகவல்களை பெற லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக எடியூரப்பா, விஜயேந்திரா, மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக கூறி, லோக் அயுக்தா போலீசார் கூடிய விரைவில் நோட்டீசு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை மூடப்பட்டு லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது லோக் அயுக்தா போலீசார், எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால், அவருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உண்டாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கில் முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ள சந்திரகாந்த் ராமலிங்கம் வேறு யாருமில்லை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவார்.

தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரூ.12 கோடி லஞ்சம் கொடுத்தாக கர்நாடக லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்திருப்பதால் ராமலிங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios