Asianet News TamilAsianet News Tamil

விடுதலையாகியும் தீராத சிக்கல்... சின்னம்மா சசிகலாவின் தூக்கம் கெடுத்த கர்நாடக உயர்நீதிமன்றம்..!

சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீது தொடரப்பட்ட வழக்கில் 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Karnataka High Court upholds Chinnamma Sasikala's sleep deprivation
Author
Karnataka, First Published Jun 12, 2021, 3:35 PM IST

சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீது தொடரப்பட்ட வழக்கில் 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Karnataka High Court upholds Chinnamma Sasikala's sleep deprivation

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அப்போதைய சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என, விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.Karnataka High Court upholds Chinnamma Sasikala's sleep deprivation

அதேநேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.எஸ். ஒகா தலைமையிலான அமர்வு, ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை 2 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios