"தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. எந்த பள்ளியும் நடப்பு ஆண்டில் கல்வி கட்டணத்தை உயர்த்தக் கூடாது. மனிதநேய அடிப்படையில் கல்வி கட்டணத்தில் 50 சதவீதத்தை பள்ளிகள் வசூலிக்கலாம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் கல்வி கட்டணத்தை உயர்த்துவதை அரசு அனுமதிக்காது. 6-10ம் வகுப்பு வரையில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது தொடர்பாக சாதக-பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது"

கர்நாடகத்தில் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. 


கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களிலும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. சில மாநிலங்களில் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் கல்வியாளர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் பெற்றோர் தரப்பின் ஆலோசனையும் கேட்கப்பட்டது.