திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்ன திராவிடர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் 10ம் வகுப்பு அரசு பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சித்தாராமையா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்ன இந்தியாவின் பூர்வகுடிகளா ? 

திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்ன திராவிடர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ் மறைக்கப்பார்க்கிறது. பிரதமர் மோடி நாட்டை ஐந்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் அபாயகரமான வேலையை செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?