கர்நாடக சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகராக மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த தர்மே கவுடா உள்ளார். கடந்த 15ம் தேதி மேலவையின் சிறப்பு கூட்டத்தில், பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்ற முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர், தனது இருக்கையில் அமர மறுத்ததால், காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.

 இதையடுத்து, துணை சபாநாயகரான தர்மே கவுடா, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், தர்மே கவுடாவை சபாநாயகர் இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வுகள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில், தர்மே கவுடா இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது உடல்நிலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கான கடிதம் அவரது உடல் அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தர்மே கவுடா மறைவுக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா இரங்கல் தெரிவித்துள்ளார்.