தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதலமைச்சராக உள்ளார். கடந்த ஆண்டு கடும் இழுபறிக்கிடையே இந்த கூட்டணி பதவி ஏற்றுக்கொண்டது.

கர்நாடக  மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடுமையான போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில எந்தக்கட்சி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்பது குறித்து செய்தி சானல்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதன்படி டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 21 இடங்களையும்,காங்கிரஸ் 7 இடங்களையும் கைப்பற்றுகிறது.

இந்தியா டுடே தனது கருத்துக் கணிப்பில் பாஜக 23 இடங்களையும் காங்கிரஸ் 4 இடங்களையும் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

நியூஸ் 18 வெளியிட்டுள்ள முடிவுகளில் பாஜக 22 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில்  பாஜக 18 இடங்களையும் காங்கிரஸ் 10 இடங்களையும் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.