தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறித்து வட மாநிலத்தவற்கு வழங்கியுள்ள அஞ்சல் துறையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம். சமீபத்தில் தமிழக அஞ்சல் துறையில் வடமாநிலத்தை சேர்ந்த குறிப்பிட்ட  ஒரு பிரிவினருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது 

கர்நாடக பாஜகவும் ஒன்றிய பாஜக அரசும் அடுக்கடுக்கான துரோகங்களை தமிழகத்திற்கு செய்வதால் தான் இந்த போராட்டம் என வேல்முருகன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும் மற்றும் அதற்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளில் வடமாநிலத்தவர்களை திட்டமிட்டு பணியமர்த்தும் அஞ்சல் துறை நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகங்கள் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று.

இதையும் படியுங்கள் : நாகர்கோவில் பாஜக மூத்த தலைவர் பேரன் அலப்பறை..?? செருப்பு போடாத MLA வுக்கு வந்த சோதனை..

அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலையதில் மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் கட்சி தொண்டர்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் : கர்நாடக அரசு மேகதாது அருகே அணை கட்ட முயற்சிப்பதில் மத்திய பாஜக துணை போகிறது எனவும் அமைச்சர் துரைமுருகன் தலமையில் அனைத்துக்கட்சி குழு மத்தியில் சென்று பேசியபோது கண்டிப்பாக அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : நான் ஒதுங்கவும் இல்ல, பதுங்கவும் இல்ல.. இனி என் ஆட்டத்தை பாருங்க.. தில்லு காட்டும் டிடிவி தனகரன்.

தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறித்து வட மாநிலத்தவற்கு வழங்கியுள்ள அஞ்சல் துறையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம். சமீபத்தில் தமிழக அஞ்சல் துறையில் வடமாநிலத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,தமிழ் பேச எழுத தெரிந்த தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு வேலைகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் கர்நாடக பாஜகவும் ஒன்றிய பாஜக அரசும் அடுக்கடுக்கான துரோகங்களை தமிழகத்திற்கு செய்வதால் தான் இந்த போராட்டம் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.