எனது சுவாசம் உள்ளவரை மேலூரில் எதற்காக கழகம் தொடங்கப்பட்டதோ அதை நிறைவேற்ற போராடுவோம். அம்மா இல்லாத காலத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அவர்களின் வேஷங்களை முறியடித்து அம்மாவின் ஆட்சியை கொண்டுவர நாம் அனைவரும் ஒற்றுமையோடு இறுதிவரை போராடுவோம். 

கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்ததால்தான் ஓய்வில் இருந்து வந்தேன், மற்றபடி ஒதுங்கவோ, பதுங்கவோ இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக- அமமுக கட்சிகள் இணைப்புக்கான சாத்தியம் இருந்தால் கட்சித் தொண்டர்களை ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்துவிட்டு சிறைக்குச் சென்றுவிட்டார் சசிகலா. அன்று முதல் இன்று வரை காட்சியை மொத்தமாக கபளீகரம் செய்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் சேர்க்க மறுத்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமமுக தனிக்கட்சி:

இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் இருந்து வருகிறார். அதிமுக தலைமைகள் மீது அதிர்ச்சியில் உள்ள தொண்டர்கள் டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள நிலையில் அதிமுகவில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பகிரங்கமாக மறுத்து வருகிறார். ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளரே நான்தான் நீங்கள் என்ன என்னை கட்சியில் சேர்ப்பது என அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் மறுபுறம் சசிகலா அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகிறார். மற்றொரு புறம் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அடுத்தடுத்து வரும் தேர்தலை எதிர்கொண்டு தனது இருப்பை காட்டிவருகிறது.

இதையும் படியுங்கள்: தீவிரமடையும் ஜெயலலிதா மரணம் விசாரணை.. நாளை விசாரணைக்கு ஆஜராக 4 மருத்துவர்களுக்கு நோட்டீஸ்.

தொடர் தோல்வி: 

இதுவரை சந்தித்த தேர்தல்களில் பெரிய அளவிற்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் பெயரளவில் அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது. கட்சி துவங்கப்பட்ட போது மிகுந்த எழுச்சியுடன் அமமுக இருந்தது, அப்போது டிடிவி தினகரன் அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, பொதுக்கூட்டம் நடத்துவது என பிசியாக இருந்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் மங்கத் தொடங்கியது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக அவர் வீட்டைவிட்டு வெளியில் வருவதையே தவிர்த்து வந்தார். டிடிவி தினகர் கதை முடிந்தது, அமமுக என்ற கட்சி களத்தில் இல்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில்தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பேட்டியிட்ட அக்கட்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

ஒதுங்கவும் இல்லை , பதுங்கவும் இல்லை: 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 5ஆம் ஆண்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கட்சி தொடங்கிய காலத்தில் என்னுடன் இருந்தவர்கள் பலர் இப்போது எங்கெங்கோ சென்று விட்டார்கள். ஆர்.கே நகர் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தாலும் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றாமல் ஓயமாட்டோம். எனது சுவாசம் உள்ளவரை மேலூரில் எதற்காக கழகம் தொடங்கப்பட்டதோ அதை நிறைவேற்ற போராடுவோம். அம்மா இல்லாத காலத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அவர்களின் வேஷங்களை முறியடித்து அம்மாவின் ஆட்சியை கொண்டுவர நாம் அனைவரும் ஒற்றுமையோடு இறுதிவரை போராடுவோம்.

இதையும் படியுங்கள்: நாகர்கோவில் பாஜக மூத்த தலைவர் பேரன் அலப்பறை..?? செருப்பு போடாத MLA வுக்கு வந்த சோதனை..

இனி எதற்காகவும் நான் பின்வாங்க மாட்டேன், கொரோனா காரணமாக ஓய்வெடுத்திருந்தோம். மற்றபடி நான் ஒதுங்கவும் கிடையாது பதுங்கவும் கிடையாது. அம்மாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதற்குத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அடுத்தவர்களை நம்பி இந்த இயக்கம் இல்லை, எங்கள் மீது தவறு ஒன்றுமில்லை கட்சிகள் இணைப்பதற்கான சாத்தியம் இருந்தால் எங்கள் கட்சித் தொண்டர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். இந்நிலையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மறைவு தான் பெரும் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.