கர்நாடக மாநில எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் வரும் மே மாதம் 5-ம் தேதியுடன் நிறவைடைவதால் 224 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது.

புதிய வாக்களர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு ஜனவரி 22-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானதை அடுத்து ஒரே கட்டமாக   மே 12  ம் தேதி வாக்குப்பதிவு  நடைபெறவிருக்கிறது, கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்றதுபோல் இந்த தேர்தலையும் ஒரேகட்டமாக நடத்த மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் 4.96 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் சராசரியாக 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது நினைவிருக்கலாம்.