கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார், தொற்று குணமான நிலையில், இணை நோய் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 28ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில்,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில்;- தமிழக சட்டமன்ற தேர்தலில் கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3% பேர் உள்ளனர். விவிபேட், ஈ.வி.எம் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றார்.