ரஜினி காந்தும், கமல் ஹாசனும் அரசியல் ஆதாயத்துக்காக காவிரி பிரச்சனையை பயன்படுத்துகின்றனர் என்றும், நடிகர் சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும் முதிர்ச்சியும் அவர்களுக்கு இல்லாதிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பிரபல கன்னட நடிகர் அனந்த்நாக் கூறியுள்ளார்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இரு மாநில மக்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளதற்கு, கர்நாடக மக்கள்
அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த கருத்தால் கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளார் நடிகர் சிம்பு. தமிழகமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரைத்துறையினரும் சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தினர்

அந்த போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை.அதே சமயத்தில் இரு மாநில மக்களும்  பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான் காவேரி விவகாரம் என பேசிய சிம்புவிற்கு கர்நாடக  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி  மற்றும் கமலுக்கு கர்நாடக மக்களிடம் கொஞ்சம் வெறுப்பு கிடைத்தாலும், அதே வேளையில் சிம்புவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரபல கன்னட நடிகர் அனந்த்நாக், இளம் நடிகர் சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும் முதிர்ச்சியும் மூத்த நடிகர்களான ரஜினி - கமலுக்கு இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக காவிரி பிரச்சனையைப் பயன்படுத்துகின்றனர் என்றார். கர்நாடகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வர இருப்பதால், இங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் இப்போதைக்கு தேர்தல் இல்லை. எனவே, கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இருவரும் காவிரி பிரச்சனைக்காக போராடியிருக்கலாம் என்றார்.

ரஜினியும் கமலும் அவர்களுடைய அரசியலுக்கு காவிரி பிரச்சனையை பகடைக்காயாக்கி குடிளர்காய பார்க்கின்றனர். இந்த பிரச்சனையில் இளம் நடிகர் சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும் முதிர்ச்சியும் மூத்த நடிகர்களான ரஜினி, கமலுக்கு இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார். தமிழக அரசியல்வாதிகள் பிரச்சனையை தீர்ப்பதில் ஆர்வமில்லாமல் பெரிதுபடுத்துகின்றனர். காவிரி, கர்நாடகத்தில் உற்பத்தியானாலும் தமிழகத்துக்கே அதிக நீர் கிடைக்கிறது. கன்னடர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள். இதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் அனந்த்நாக் கூறியுள்ளார்.