திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அண்ணா அறிவாலயத்தில் இருந்த கலைஞர் அரங்கேமே அதிர்ந்தது. மு.க.ஸ்டாலினின் அடி பொடிகள் எல்லாம் எழுந்து நின்று கைத் தட்டினர். ஆனால், ஒருவர் மட்டும்தான், மிகுந்த முகவாட்டத்தோடு காணப்பட்டார். பெரிய ரியாக் ஷன் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. அந்த பிரமுகர் கனிமொழிதான்.

தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்புகளில் திமுக பொதுக்குழு காட்சிகள் ஒளிப்பரப்பானது. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டவுடன் பல நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுததுடன், உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டனர்.

ஆனால், ஸ்டாலினின் சகோதரியான கனிமொழியோ, தனது முகத்தில் எந்தவித ரியாக் ஷனையும் காட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

கடந்த ஒரு வாரகாலமாகவே, தனக்கு துணை பொது செயலாளர் பதவி வேண்டும் என தனது தந்தையான கருணாநிதியிடம், கனிமொழி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால, இன்றைய பொதுக்குழுவில் அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகாததால், கனிமொழி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செயல் தலைவர் பதவி அறிவித்தவுடன் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோபாலபுரம் வந்து ஆசி பெற்றார். அதற்கு முன்னதாக பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக சிஐடி காலனி, ராஜாத்தி அம்மாள் வீட்டில் இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று, ஆசிர்வாதம் வாங்கி சென்றார் மு.க.ஸ்டாலின்.

அப்போது கனிமொழியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தனது அண்ணன் செயல் தலைவராக பதவியேற்றதற்கு, தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கனிமொழி பதிவிட்டுள்ளார்.