kanimozhi parade in delhi

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் டெல்லியில் இன்று பேரணி நடத்தப்பட்டது.திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக இருப்பதால் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் டெல்லியில் இன்று பேரணி நடத்தினர்.

டெல்லி மாண்டியா ஹவுசில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தற்போது பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து யாருடைய கவனமும் இல்லை என்பதால், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பேரணியை நடத்துவதாக கனிமொழி தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்கங்கள் இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவை , பாஜக நினைத்தால் உடனடியாக நிறைவேற்ற முடியும் எனவும் கனிமொழி தெரிவித்தார்.