பிரதமர் மோடி தமிழ்நாட்டிலையே குடியேறினாலும் பாஜகவிற்கு ஓட்டுக்கள் கிடைக்காது- விளாசும் கனிமொழி

 கால் வாசி காசு ஒன்றிய அரசு, முக்கால் வாசி காசு தமிழ்நாடு அரசு, தமிழக அரசு பணத்தில் வீடு கட்டி விட்டு மோடி படத்தை போட்டு பாஜக ஸ்டிக்கர் ஆட்சி நடத்துவதாக விமர்சித்த கனிமொழி,  ஒரு ஸ்டிக்கர் பாஜக, மற்றொரு ஸ்டிக்கர் அதிமுக இரண்டும் தேர்தலுக்கு பின்னால் ஒன்று சேர்ந்து விடும் எனவும் கூறினார். 
 

Kanimozhi has said that BJP will not get votes even if Prime Minister Modi settles in Tamil Nadu KAK

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,  இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகள் சட்டத்திற்கு எதிராகவும், , ஒரே நாடு ஒரே தேர்தல் என அனைத்திலும் அதிமுகவினர் கையெழுத்திட்டதாக கூறினார்.  மத்திய அரசு நிதியை எதிர்பார்த்து இல்லாமல் தமிழக அரசு சுயமாக செயலாற்றி வருகிறது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசு மத்திய அரசு, இந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்து விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

Kanimozhi has said that BJP will not get votes even if Prime Minister Modi settles in Tamil Nadu KAK

தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்களுக்கான பல்வேறு  திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரும் போது எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு பதிலடியாக நிதியை வழங்காமல், அமைச்சர்களை வழக்குகளை காட்டி மிரட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் நாங்கள் கலைஞரின் பிள்ளைகள் என தெரிவித்தார். தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் வெளி துறைமுகம் விரிவுபடுத்த  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான்  23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தேர்தலுக்காக தற்போது அவசர அவசரமாக வந்து 7 ஆயிரம் கோடியில் அடிக்கல் நாட்டி இருக்கிறார் பிரதமர் மோடி,

Kanimozhi has said that BJP will not get votes even if Prime Minister Modi settles in Tamil Nadu KAK

 கால் வாசி காசு ஒன்றிய அரசு, முக்கால் வாசி காசு தமிழ்நாடு அரசு, தமிழக அரசு காசில் வீடு கட்டி விட்டு மோடி படத்தை போட்டு ஸ்டிக்கர் ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்தார். ஒரு ஸ்டிக்கர் பாஜக, மற்றொரு ஸ்டிக்கர் அதிமுக இரண்டும் தேர்தலுக்கு பின்னால் ஒன்று சேர்ந்து விடும் எனவும் கூறினார்.  பிரதமர் மோடி இப்போதெல்லாம் தமிழகத்தில் தான் இருக்கிறார், எதற்காக பிளைட் எடுத்துக்கொண்டு செல்கிறார் என தெரியவில்லை.

நேற்று தமிழ்நாடு, நாளை தமிழ்நாடு, அடுத்த வாரம் தமிழ்நாடு, போனவாரம் தமிழ்நாடு என தமிழகத்திலையே இருக்கிறார். எத்தனை தடவை வந்தால் என்ன .? தமிழகத்திலையே குடியேறி இருந்தால் கூட பாஜகவிற்கு வாக்குகள் விழப்போவதில்லை. இங்குள்ள மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்தார். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்து விட்டு செல்கிறாரே தவிர தமிழகத்திற்கு ஒரு பைசா கூட கொடுப்பதில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருப்பார்கள் என கனிமொழி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மீண்டும் தமிழகம் வரும் மோடி.! உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை- முக்கிய சாலையில் இன்று போக்குவரத்துக்கு தடை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios