சிம்புவின் பேச்சால் மனமுருகிய கன்னட மக்கள்...! ஒரு குவளை  தண்ணீர் கொடுத்த கன்னட தாய்...!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசியல்ம் கட்சிகள் முட்டி மோதி போராட்டம் நடத்தி வரும் சமயத்தில் இதற்கெல்லாம் தீர்வு காண நடிகர் சிம்பு சொன்ன அன்பான வார்த்தைக்கு, கன்னட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது

அப்படி என்ன சொன்னார் சிம்பு தெரியுமா ...?

 நமக்கு இருக்குற அதே உணர்வு தான் கன்னட மக்களுக்கும் உண்டு... அவர்களுக்கு போதுமான நீரை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதமுள்ள   தண்ணீரை நமக்கு தர மாட்டேன்னு எந்த கன்னட தாயாவது உங்களுக்கு சொன்னார்களா..?

இல்லையே....தர முடியாது என எந்த கன்னட தாயும் சொல்ல வில்லை.. தர முடியாது என சொல்வதெல்லாம் நடுவில் இருக்கும் அரசியல்  வாதிகள் தான்....

அதே போன்று தமிழகத்தில் இது போன்ற பிரச்சனை ஏற்படுத்துவதும் அரசியல் வாதிகள் தான்...இத்தனை ஆண்டு காலமாக காவரி தண்ணீருக்காக போராடி எதனை பெற்றோம்....?

எதுவுமே கிடையாது.....

ஆனால்,ஒரு மனிதனாய் அன்பால் கேட்டு பாருங்கள் ...அவர்கள் தர முடியாது என சொல்வார்களா....?

ஒரு குடும்பத்தில், தம் பிள்ளைகள் முதலில் உணவை உண்ணட்டும்.... பிறகு மீதியானதை  மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என ஒரு தாய் நினைப்பாள்..அதே போன்று தான் அவர்கள் முதலில் எடுத்துகொள்ளட்டும்...பிறகு நமக்கு தர மாட்டேனு சொல்வார்களா  கன்னடர்கள் என மிகவும் அருமையாக மனிதாபிமானமாய் பேசி உள்ளார்  நடிகர் சிம்பு...

இவருடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தும், இவருடைய அன்புக்கு அடிபணிந்தும் கனந்த மக்கள் அவர்கள்  "ஒரு குவளை தண்ணீரை" எடுத்து கொடுத்து வருகின்றனர் கன்னட மக்கள்".

அதாவது,11 ஆம் தேதியான நேற்று மாலை 3 மணி முதல் 6 மணிக்குள், கன்னட தாய்மார்கள் ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாலே போதும்...நமக்கு தண்ணீர் கொடுப்பதற்கு அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்பதை  தெரிந்துக் கொள்ளலாம்....

ஒரு தாய், தான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமே உணவு கொடுக்க  மாட்டாள்....மற்ற பிள்ளைகளையும் தான் பெற்ற பிள்ளைகளாக  நினைத்து  கண்டிப்பாக  தண்ணீர் கொடுப்பார் என நடிகர் சிம்பு மிகவும் அன்பான வார்த்தையாலும் தாழ்மையான வார்தைகளால் பேசி உள்ளார்

இவருடைய வார்த்தைக்கு கன்னட மக்கள் பல்வேறு பகுதிகளில் அவரவர் வீட்டில் இது போன்று தண்ணீர் கொடுத்தும், இதுவரை எதாவது பிரச்சனை என்றால், எல்லைப்பகுதியில்,தமிழக ஓட்டுனர்களை  கன்னடர்கள் அடிக்கும் காலம் சென்று, தற்போது சிம்பு வார்த்தையால் கன்னட  மக்கள் தமிழக பேருந்து ஓட்டுனருக்கு தண்ணீர் கொடுத்து உள்ளனர்

 

உச்சநீதிமன்றம் சொல்லி கூட தண்ணீர்  தர மறுத்த கர்நாடகம், நடிகர் சிம்புவின் அன்பான பேச்சுக்கு மனமுருகி முதலில் ஒரு குவளை தண்ணீர் தர முன் வந்துள்ளனர் என்பதே, மனதார அன்பால் பெற்ற வெற்றியாக பார்க்கப்  படுகிறது.