Asianet News TamilAsianet News Tamil

நான் உங்ககிட்டயே வந்துட்டேன்.. - டிடிவி டீமிலிருந்து எஸ்கேப்பான ஜக்கையன் எம்.எல்.ஏ முதல்வருடன் சந்திப்பு...!!

kambam mla jakkaiyan meet to chief minister edappaadi palanichami
kambam mla jakkaiyan meet to chief minister edappaadi palanichami
Author
First Published Sep 8, 2017, 2:34 PM IST


சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சந்தித்து பேசினார். 

எடப்பாடியும் பன்னீரும் இணைந்ததால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர்  இதுகுறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என எதிர்கட்சிகளிடம் தூது விட்டார். 

kambam mla jakkaiyan meet to chief minister edappaadi palanichami

இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் புதுச்சேரி ரிசார்ட்டில் குதுகூலமாக தங்கிவிட்டு நேற்று அங்கிருந்து திரும்பினர். 

உள்கட்சி பிரச்சனை என்று ஆளுநர் கூறுவதற்கு இதில் முகாந்திரமில்லை என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முதல்வரை மாற்றினால் மட்டும் போதும் என வலியுறுத்தி வந்த டிடிவி தரப்பு தற்போது ஆட்சி கலிந்தாலும் பரவாயில்லை என கூறிவருகின்றனர். 

இதைதொடர்ந்து நேற்று சென்னைக்கு வந்த எம்எல்ஏ ஜக்கையன், சபாநயகர் தனபாலை சந்தித்து, தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

kambam mla jakkaiyan meet to chief minister edappaadi palanichami

இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜக்கையன், தாம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகத் தொடர்வதையே விரும்புவதாகக் கூறினார். மேலும் டிடிவி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது போல் தோன்றுகிறது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சந்தித்து பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios