Kamal political entrance ..! What are the screen celebrities ..!
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பிவருகின்றன. கண்டிப்பாக அரசியலுக்கு வருவதாகவும் அரசியலில் தனித்து நின்று மக்கள் நலனுக்காக முதல்வராக விரும்புவதாக கமல் தெரிவித்தார்.
கமல் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்பதுதான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாக்.
இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் கமல்ஹாசன், சேவை செய்துவிட்டு அரசியலுக்கு வரலாமே? என சரத்குமார் தெரிவித்தார். மேலும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்தவகையில், கமலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலுக்கு வந்தபின்னர்தான் அரசியல் பற்றி அவருக்கு புரியும் எனவும் சரத்குமார் தெரிவித்தார்.
அரசியலுக்கு வருவதாக உறுதியாக அறிவித்த கமலின் துணிச்சமை பாராட்டுவதாகவும் ஆனால் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவது மக்கள் கையில்தான் உள்ளது எனவும் நடிகர் விவேக் கருத்து தெரிவித்தார்.
