kamalhassan speech in business man conference
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் வணிகர் சங்க தினத்தில் 35 வது ஆண்டு மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு பேசிவருகிறார்கள்.
இதில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
அதன்படி மக்கள் மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினர் அதில் கிராம சபை கூட்டத்தை நான் கண்டுபிடிக்கவில்லை நினைவு படுத்தவே செய்கிறேன். கிராமசபை கூட்டத்தில் வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும். கிராம சபைக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

வணிகர்கள் தேவையில்லாமல் கடையடைப்பு இல்லை என்கிற உங்கள் உறுதியை பாராட்டுகிறேன். வணிகர்கள் நீங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் வட நாட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. மய்யம் செயலியை வணிகர்களும் பயன்படுத்தலாம். தமிழகத்தை நல்ல வழியில் கொண்டு செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளது. தமிழகம் இழந்த மாண்பை மீட்டெட்டுப்பதே மக்கள் நீதி மய்யத்தின் திட்டம். சிறுவணிகர்கள் தான் உலகத்தையே தாங்கி பிடிக்கக்கூடியவர்கள். என்று பேசினார்
மேலும் வணிகர்களாகிய நீங்களும் மக்கள் நீதி மய்யமும் கைகோர்த்து செயல்படவேண்டும் என்றும் உங்களின் கோரிக்கையை கேட்க மக்கள் நீதி மய்யம் ஆவலாக இருக்கிறது என்றும் பேசினார்
