கடந்த 21 ஆம் தேதி 'மக்கள் நீதி மய்யம்' என்கிற கட்சியை துவங்கி தன்னுடைய கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார் நடிகர் கமலஹாசன். 

கட்சியை துவங்கியது மட்டும் இன்றி கட்சியை பலப்படுத்தும், நோக்கத்துடனும் தன்னுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் கமல்.

அதன் அடிப்படையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கமல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, வணக்கம் நீங்கள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறீர்களா அப்போ இந்த வீடியோவை நீங்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

நாட்டு நடப்பும், அரசியலும் நல்லபடியாக சென்ருக்கொண்டிருப்பதாக நீங்கள் நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் நீங்கள் புறப்படலாம் என கூறுகிறார்.

பின் தன்னுடைய கைகடிகாரத்தை பார்க்கும் கமல், வாவ் இன்னும் நீங்க இங்குதான் இருக்கீங்களா... அப்ப நீங்க நம்ப காட்சி தான். அங்க என்ன செய்றீங்க களத்திற்கு வாங்க sign up என தெரிவித்துள்ளார்.