சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். 

இது சமரச இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அடிப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார்தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன். இதனால் எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் என தெரிவித்தார்.