சுயநலத்தால்தான் அரசியலுக்கு வந்தேன்: தலையை சுற்றி நோஸை தொட்டு, நைஸாக உண்மையை உடைத்த கமல்ஹாசன். 

*    பார்ப்பதற்கு இந்திரா காந்தி போல் உள்ளதால் பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் விரும்பியதை ராகுல் நிறைவேற்றியுள்ளார்.: திருநாவுக்கரசர்.
(க்கும், மு.க. முத்து கூட பாக்குறதுக்கு எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கார்ன்னு அவுக அப்பா எக்ஸ்ட்ரா பவுடர் போட்டு அனுப்பினார்! வேலைக்கு ஆகல. நம்ம பேபிம்மா தீபா கூட தன்னை ஜெயலலிதா மாதிரி நினைச்சுக்கிட்டு என்னவெல்லாமோ பண்ணுச்சு, தேறல. இப்போ நீங்களா? பஹூத் அச்சா!)

*    கோடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, கவர்னர் பன்வாரிலால் நடவடிக்கை எடுக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்: ஸ்டாலின். 
(சர்தான் தலைவரே! அப்போ இன்னும் சில மாசங்களுக்கு போராட்டம் நடத்த காரணத்த தேடி அலைய வேண்டாம், அப்பப்ப ராஜ்பவன் முன்னாடி போய் நின்னு கோஷம் போட்டு கைதாகி, அன்றைய தின அரசியலை ஓட்டிடலாமுன்னு முடிவே பண்ணிட்டீங்க.)

*    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பயன்பாடு மூலம் ஓட்டுரிமை வலுப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளில் எனக்கு உடன்பாடு இல்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதிய்நாத்.
(தல உங்களுக்கு எதுலதான் உடன்பாடு இருந்துச்சு? ஆக்ஸிஜன் சிலிண்ட இல்லாம கொத்துக் கொத்தா குழந்தைங்க கவர்மெண்டு ஆஸ்பத்திரியில செத்து, பிர்ச்னை வெடிச்சப்பவே உங்களுக்கு பல விஷயங்களில் உடன்பாடு இல்லையே.)

*    பார்வையாளர்களாக இருந்துவிட்டால் அடிமை ஆகிவிடுவோம். நான் பாதிக்கப்பட்டுதான் அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்ஹாசன். 
(ஆக, சொந்த வலியால்தான் அரசியலுக்கு வந்திருக்கேன், பொது பிரச்னையால் இல்லைன்னு சுத்தி வளைச்சு ஒத்துக்கிட்டார் நம்மவரு. அதே மாதிரி சொந்த வலியால அப்படியே நைஸா ஒதுங்கி, ஓடிப்போகாம இருந்தாலும் சரி.)

*    பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்னை திட்டுவதெல்லாம் அவர்கள் எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசுகள்தான், வேறில்லை: ராகுல் காந்தி. 


(பப்பு எவ்வளவு பாந்தமா பேசுது பாருங்க பாஸ். அம்மாகிட்ட திட்டு வாங்கி அழும்போதெல்லாம் ‘நான் உன்னை திட்டுறது உன்னை வெற்றி பெற வைக்கிறதுக்குதான் டா கண்ணா!’ன்னு அவுங்க அம்மா பேசுனதை இங்கேயும் பொருத்திப் பார்க்குது புள்ள.)