Asianet News TamilAsianet News Tamil

12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டித்தள்ளிய கமல்ஹாசன் - வைரலாகும் டுவீட்

தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Kamalhaasan praises MK stalin for recalling 12 hours working bill
Author
First Published Apr 25, 2023, 10:57 AM IST | Last Updated Apr 25, 2023, 10:57 AM IST

தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தி அண்மையில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக-வின் தோழமை கட்சிகளும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். அதேபோல் மக்கள் மத்தியிலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த மசோதா நிறுத்து வைக்கப்படுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்த தமிழக முதல்வருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... இது மக்களை ஏமாற்றுகின்ற செயல்... திமுகவை கடுமையாக விளாசிய சசிகலா!!

Kamalhaasan praises MK stalin for recalling 12 hours working bill

அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். 

யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சர்வதேச மாநாடு, விளையாட்டுப் போட்டியை மதுவின்றி நடத்த முடியாதா? மது வழங்குவது என்ன தமிழ்ப் பண்பாடா? அன்புமணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios