kamalahassan meet ex election officer tnseshan

உலக நாயகன் கமலஹாசன் வரும் 21ஆம் தேதி தன்னுடைய புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். இந்நிலையில் அவருடைய கட்சியில் பல பிரபலங்கள் அன்றைய தினம் இவரது கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி, டி.என்.சேஷனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல், 'தன்னுடைய உடல் நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் என்று முன்னால் தலைமை தேர்தல் ஆணையர் கூறியதாக தெரிவித்தார். மேலும் தனது கட்சியின் பெயரை இந்த மாதம் 21 ஆம் தேதி கண்டிப்பாக அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.