நடிகர் கமலஹாசன் தற்போது தன்னுடைய கட்சி பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று ஆழ்வார் பேட்டையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தன்னுடைய தொண்டர்களை சந்தித்து பேசினார் கமலஹாசன். 

இதில் வரும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு அதில் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். 

மேலும் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், மக்கள் அமர்வதற்கான சிம்மாசனத்தை செதுக்கி வருவதாகவும் தெரிவித்தார். 

அரசியல் களத்தில், சினிமாவை சேர்ந்த இரண்டு பிரபலங்கள் ஒரே நேரத்தில் காலடி எடுத்து வைத்து, தங்களுக்கான அரசியல் பாதையை உருவாக்கி வரும் நிலையில், கமலில் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்று ரஜினி பின் தங்கி விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.