நீட் தேர்வு விவகாரத்தில், மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசுங்கள். குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம் என்று நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு தரப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு விலக்கு வேண்டுமென அவசர சட்டம் இயற்றினால், நீட் ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்த முடிவுக்கு நன்றி தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசின் சட்ட வரைவு நாளை காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும், இது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.

இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நீட் தேர்வு ஒத்திப்போட  மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர்கள் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்று கூறியுள்ளார்.