எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்.

கட்சியின் 2 ஆவது பொதுக்கூட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதியான நாளை நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார் கமல்.

இதற்கு முன்னதாக,கட்சியின் முதல் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கலந்துக்கொண்டனர்

இந்நிலையில்,நாளை திருச்சியில் நடைப்பெற இருக்கும் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக,இன்று மதியம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார் கமல்

இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலை பொதுமக்கள் வெகுவாக வரவேற்றனர்

மக்களோடு மக்களாக கமல்

தூத்துக்குடியில்,தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்,கமல் கலந்துகொண்டு தன்னுடைய ஆதரவை  தெரிவித்தார்.

அங்கு,மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராடினர் கமல்... மேலும் தூத்துக்குடி மக்களின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும்  மாஸ்டர்.அருண்குமாரின் போராட்ட ஒலி மக்களுக்கு பெரிய  நம்பிக்கையாக உள்ளார்.

சிறுவன் அருண்குமாருக்கு தனது பாராட்டைதெரிவித்துக்கொண்டும், தூத்துக்குடி மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தும் அங்கிருந்து தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய கமல்,இன்று வைகை  எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையிலிருந்து திருச்சி கிளம்பிவிட்டார்.

நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் காவேரி மேலாண்மை வாரியம் குறித்தும்,ஸ்டெர்லைட் குறித்தும் பேசுவதாக தகவல் வெளியாகி  உள்ளது.