இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சிறுபான்மை மக்கள் முன்பு பேசிய கமல் திருவாய் மலர்ந்து வழக்கம் போல உளறிவிட்டார். 

சும்மா இருப்பார்களா எச்.ராஜா போன்ற பாஜக கட்சியினர். கமலின் கட்சியை தடை செய்ய வேண்டும் என எச்.ராஜாவும் தனது பங்குக்கு ஆரம்பித்து வைத்துவிட்டார். அரசில் பங்கு வகிக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியோ ஒருபடி மேலேபோய் கமலின் நாக்கையே அறுத்துவிட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

 

ராஜேந்திரபாலாஜியின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலான செய்தி சேனல்களில் பற்றிக்கொண்டது போதுவாக வடமாநிலத்தின் சில தலைவர்களே தனது அரசியல் எதிரிகளை பற்றி பேசும்போது நாக்கை அறுப்பேன், மூக்கை அறுப்பேன் என்று கூறுவது வழக்கமாக ஒன்று. ஆனால் தமிழக அமைச்சராக இருப்பவர் ஒருவரே கமலின் நாக்கை அறுப்பேன் என்று கூறிய டைம்ஸ் ஆப் இந்தியா தொலைக்காட்சியில் விவாத பொருளாகவே மாறிப்போனது. கமலுக்கு இப்படி தமிழக மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு வலுக்க தொடங்கியுள்ளது.  

தமிழ்நாட்டின் பிரபல குடும்பத்தின் பேரனும் பாலிவுட் சூப்பர் நடிகரும் தற்போது பாஜக கட்சியை சேர்ந்த விவேக் ஓபராய் நாட்டை துண்டாக்க வேண்டாம் என காட்டமாகவே கருத்தை தெரிவித்திருந்தார் .மேலும் பாஜக கட்சி மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கமல் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தநிலையில் தான் கமல்ஹாசனுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. கோவையில் இந்து அமைப்புகள் சேர்ந்து கமலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய நிலையில். நாகர்கோவிலில் கமல் உருவபொம்மை எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமல்ஹாசன் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.