இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை என தி.க., தலைவர் கி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசன் ’’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே’’ எனத் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி நாலாபுறமும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், கமலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே கோட்சே என கமல் கூறியது சரி தான். நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்’’ எனத் தெரிவித்தார். 

இந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் கி. வீரமணி பிற மத மூடநம்பிக்கைகளையும் விமர்சிக்க வேண்டும் என்கிற எதிர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வப்போது கி. வீரமணி சர்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலைலியில் கமல் ஹாசன் கருத்துக்கு வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளதில் ஆச்சர்யமில்லை.