நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன் எனவும் நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் கமல் தெரிவித்துள்ளார். 

என் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றதாகவும் இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம் எனவும் தெரிவித்தார். 

நடிகர் கமலஹாசன் கடந்த 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அவரது அண்ணனின் ஆசி பெற்று தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார்.

இதையடுத்து அவரது கட்சியில் மாணவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர்  சேர்ந்துள்ளனர். கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை வீடு கட்சி அலுவலகமாக மாறி வருகிறது. 

தனது கட்சி பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு நல்ல கருத்துகளையும் சமூக சிந்தனைகளையும் மக்களிடத்தில் தூண்டி வருகிறார். 

மக்கள் நலம் ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என கூறிவருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், மக்களின் நலம் ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை எனவும், கொள்கை வேறு திட்டம் வேறு எனவும் தெரிவித்தார். 

கொள்கை என்றும் மாறாது எனவும் ஆனால் திட்டம் மாறும் எனவும் கொள்கையை காப்பாற்ற திட்டம் போடுவோம். ஆனால் திட்டம் சரியில்லை என்றால் கொள்கைக்காக மாற்றுவோம் எனவும் அறிவுறுத்தினார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன் எனவும் நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் எனவும் தெரிவித்தார். 

என் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றதாகவும் இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம் எனவும் தெரிவித்தார்.