MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • மீண்டும் மீண்டும் பிரேமலதாவின் அதே தவறு..! தமிழகம் கண்டிராத தேமுதிகவின் சீக்ரெட் பிளான்..?

மீண்டும் மீண்டும் பிரேமலதாவின் அதே தவறு..! தமிழகம் கண்டிராத தேமுதிகவின் சீக்ரெட் பிளான்..?

பிரேமலதா மீண்டும் அதே தவறை செய்கிறார். இருக்கும் செல்வாக்கு பயன்படுத்திக்கொள்ளாமல் வாய்ப்புகளை வீணடிக்கிறார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

4 Min read
Author : Thiraviya raj
Published : Feb 03 2026, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேமுதிக சிம்ம சொப்பனமா..?
Image Credit : our own

தேமுதிக சிம்ம சொப்பனமா..?

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் ஓரளவுக்கு இறுதிச்செய்யப்பட்டு விட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக, கூட்டணி பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ‘‘எங்களுக்கு அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். நாங்கள் இடம்பெறுகிற கூட்டணியே வெல்லும். எதிர்கட்சிளுக்கு தேமுதிக சிம்ம சொப்பனமாக உள்ளோம்’’ என்று கூறியிருக்கிறார். இது திமுக - அதிமுக என இரு கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு திமுகவும் -அதிமுகவும் கிட்டத்தட்ட தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டன. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இன்று எந்த பக்கம் செல்வது என தெரியாமல் பின்னடவை சந்தித்து வருகிறது. விஜயகாந்தின் செல்வாக்கு தேமுதிகவின் அடிப்படை வாக்கு வங்கி. தெலுங்கு பேசும் மக்கள் ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அதனை சரியாகப் பயன்படுத்தி கூட்டணியை உறுதி செய்யாமல் வாய்ப்புகளை தவற விட்டு வருகிறார் பிரேமலதா என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது. விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தொடங்கப்பட்ட காலத்தில் அது மிக வேகமாக வளர்ந்த ஒரு அரசியல் இயக்கமாகவே பார்க்கப்பட்டது. 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் கிடைத்த வெற்றி அந்த கட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

24
தலைகீழாக சரிந்த தேமுதிகவில் நிலைமை
Image Credit : Asianet News

தலைகீழாக சரிந்த தேமுதிகவில் நிலைமை

தொடர்ந்து 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் எதிர்க்கட்சிக்கு அந்தஸ்துக்கு சென்றடைந்தது. தேமுதிகவின் உச்சகட்டமாக அது அப்போது பார்க்கப்பட்டது. ஆனால் 2016 தேர்தல் மக்கள் நல கூட்டணி என ஒரு புதிய அரசியல் முயற்சியில் இறங்கியதுதான் தேமுதிகவின் அரசியல் பாதையை தலைகீழாக மாற்றிப் போட்டுவிட்டது. அதன் பிறகு தேமுதிக தொடர்ந்து தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வந்தது. ஒரு காலத்தில் 8% வைத்திருந்த தேமுதிக இப்போது ஒரு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இந்த நிலையில் 2026 தேர்தல் தேமுதிகவிற்கு அக்கினி பரீட்சை என்றே கருதலாம்.தேமுதிக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழகத்தின் மாற்று சக்தியாக விஜயகாந்த் பார்க்கப்பட்டார். ஆனால் அதெல்லாம் அந்த காலம். இப்போது மாறிப் போய்விட்டது. இருந்தாலும் பிரேமலதாவும், அவரின் மகன் விஜய பிரபாகரனும் இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடுத்த எடுத்த எடுப்பிலேயே 20 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டு கண்டிஷனோடுதான் பேச்சு வார்த்தை தொடங்குகிறது தேமுதிக. முதற்கட்ட பேச்சுவார்த்தையோடு இரு பெரும் கட்சிகளும் கதவை சாத்திவிட்டன. அத்தோடு பிரேமலதாவை துணை முதலமைச்சர் ஆக்குவோம் என மாநில மாநாட்டில் சொல்லி அதிர வைத்தார் எல்.கே.சுதீஷ். நாங்க இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் சொல்லி வருவது திமுக -அதிமுக கட்சிகளை மேலும் எரிச்சலாக்கி இருக்கிறது என்கிறார்கள். அதிமுக தரப்பில் 6 முதல் 10 தொகுதிகளும், திமுக தரப்பில் அதிகபட்சம் 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என கறாராக சொல்லி விட்டார்கள்.

Related Articles

Related image1
அரசு ஊழியர்களின் பியூசை பிடுங்கிய அரசு..! சொத்து விவரங்களை வழங்காத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்
34
தவெக கூட்டணியில் தேமுதிக?
Image Credit : Google

தவெக கூட்டணியில் தேமுதிக?

இருதரப்பும் ராஜ்யசபா சீட்டு குறித்து உறுதியான முடிவு சொல்லவில்லை என கூறப்படுகிறது. இவ்வளவு குறைவான தொகுதிகளை வாங்க யோசித்து கூட்டணியை இறுதி செய்யாமல் தவிக்கிறார் பிரேமலதா. இவ்வளவு தொகுதிகள்தான் கொடுக்க முடியும். இஷ்டம் இருந்தால் வரட்டும். இல்லையென்றால் இருக்கட்டும் என்கிற மனநிலையில் திமுகவும், அதிமுகவும் இருப்பதால் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது தேமுதிக. தனித்து போட்டியிடவில்லை என உறுதியாக சொல்லிட்டார் பிரேமலதா. எனவே இந்த இரு கூட்டணிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் தவெகபக்கம் போக வேண்டும். ஆனால் தவெக ஆப்ஷனை பிரேமலதா தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என்கிறார்கள்.

இந்த தேர்தலிலும் கட்சி தோல்வி அடைண்ந்தால் தொண்டர்களின் மனநலம் மேலும் தளர்ந்து போகும் அபாயம் இருப்பதால் கூட்டணி முடிவுகளை பிரேமதா சரியாக எடுக்க வேண்டும். விஜயகாந்த் 2024 மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் மறைவான உருவான அனுதாப அலை தேமுதிகவிற்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. இருப்பினும் விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் மிகக் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் பல தொகுதிகளில் தேமுதிகவுக்கு வந்த வாக்குகள் அதிமுகவிற்கு மறைமுக பலமாக கிடைத்தவை. தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கிடைத்த கூடுதல் வாக்குகள் விஜயகாந்த் மீது இருந்த தனிப்பட்ட ஈர்ப்பு, பிரேமலதாவின் தீவிர பிரச்சாரம், குறிப்பிட்ட சமூக ஆதரவு ஆகியவற்றின் கலவையாகவே இருந்தது.

தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற பகுதிகளிலும் இதேபோன்று தேமுதிக வாக்குகள் கூட்டணி கட்சிக்கு ஆதரவாகவே மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தொகுதிக்கு ஐந்தாயிரம் முதல் 8000 வாக்குகள் வரை தேமுதிகவுக்கு உறுதியான ஆதரவு இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில் நடிகர் விஜய் களத்தில் இருப்பதால் திமுக மற்றும் அதிமுக வாக்குகள் பிளவுபடும் சூழல் உருவாகலாம். அப்படியான சூழலில் குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். தேமுதிக வாக்குகள் பலம் சேர்க்கும் என்பதால்தான் இரு திராவிட கட்சிகளும் தேமுதிகவை கூட்டணியில் இணைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

44
மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பிரேமதா
Image Credit : ANI

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பிரேமதா

தற்போதைய பேச்சுவார்த்தைகளில் தேமுடிகவிற்கு சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 5 அல்லது 6 என்கிற அளவில் தான் பேசப்படுகிறது. ஆனால், தேமுதிக தரப்பில் கட்டாயமாக ஒரு மாநிலங்களவை வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகிறது. கொள்கை அடிப்படையிலான கூட்டணியைவிட பேரம் மற்றும் லாப, நஷ்ட கணக்கே முன்னிலைப்பெறும் சூழல் உருவாகி இருக்கிறது. எந்த கட்சி அதிக அரசியல் பலன் தருகிறது என்பதையே அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் தேமுதிக இருப்பது கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த கால அனுபவங்களை பார்த்தால் தேமுதிக அரசியல் கொள்கைகளை விட, தேர்தல் கணக்குகளை முன்னிலைப்படுத்துவது என்கிற விமர்சனங்களும் உண்டு.

அதே நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் கடைசி வரை கூட்டணியை உறுதி செய்யாமல் இழுத்து வந்தது. விஜயகாந்த் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தபோதும், பிரேமலதா அவரது சகோதரர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இரு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிய இறுதி செய்வார்கள். இடனாலேயே 2021ல் தேமுதிக தனித்து விடப்பட்டது. தற்போது பிரேமலதா மீண்டும் அதே தவறை செய்கிறார். இருக்கும் செல்வாக்கு பயன்படுத்திக்கொள்ளாமல் வாய்ப்புகளை வீணடிக்கிறார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

About the Author

TR
Thiraviya raj
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் விஜய்..! 234 தொகுதிகளிலும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு
Recommended image2
பதவி விலகுகிறேன்..! தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!
Recommended image3
பலூச் படையினரிடம் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையம்..! வெறித்தனமான தாக்குதல்.. கடும் பீதியில் இராணுவம்..!
Related Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் பியூசை பிடுங்கிய அரசு..! சொத்து விவரங்களை வழங்காத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved