kamal planned to meet mamtha banarji asap

கமலின் அடுத்த சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சமீபத்தில் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார் கமல்ஹாசன். இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் கமல் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பிற்காக மம்தாவிடம் கமல் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

இதற்கு முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது கூட செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல். அரசியலுக்கு தேவையானதை இவரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்

பின்னர் பல அதிரடி கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் கமல் , அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளார். அதாவது சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு , சில ஐடியா கிடைத்திருக்கு கமலுக்கு. அதே வேகத்தில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்திக்க ஆயத்தமாகிவிட்டார் கமல் 

அடுத்து என்ன செய்ய போகிறார் கமல் என பலரும் வழி மேல் விழி வைத்து பார்த்து வருகின்றனர்