யாரும் எதிர்பாராத வகையில் நான்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து களமிறங்கியது. துவக்கத்தில் கட்சிக்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத நிலையில் கமலின் பிரசார வியூகம் மற்றும் பிரச்சார ஸ்டைல் ஓரளவு வாக்காளர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மையம் பெறுவதற்கான சூழல் இருந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுமா போட்டியிடாத என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. அதற்கு விடையாக நேற்று நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார் கமல். இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் அவசர அவசரமாக வேட்பாளர்களை மக்கள் நீதி மையம் அறிவித்து அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் களமிறங்கிய மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை அதாவது சுமார் பத்து விழுக்காடு வாக்குகளைப் பெறுவார்கள் என்று தீர்க்கமாக நம்புகிறார் கமல். தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் வேட்பாளர்களை நிறுத்தினார் நடுநிலைவாக்குகள் தனக்கே கிடைக்கும் என்று கமல் தனக்கு போட்டுள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும் டிடிவி தினகரனை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடுத்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் கமலின் லட்சியமாக இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனக்கு 10 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதால் இந்த இடைத்தேர்தல் வாய்ப்பையும் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக கமல் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

சுமார் 25 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தை நடத்தி ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை உருவாக்கி அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயகாந்தால் கூட முதல் தேர்தலில் 9 விழுக்காடு வாக்குகளை மட்டுமே நெருங்க முடிந்தது. ஆனால் எந்த ரசிகர் மன்ற பின்புலமும் இல்லாமல் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு திடீரென அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் தனக்கு 10 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பது பகல் கனவு என்று அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கூறி வருகின்றனர்.