Asianet News TamilAsianet News Tamil

செத்தால் ட்விட்டு..! இவ்வளவுதான் கமல்ஹாசனின் நன்றியுணர்வு..! கொதிக்கும் ரசிகர்கள்..!!

கமல் கட்சியின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸிடம் போன் பண்ணி சிலர் ‘பாலசந்தருக்கு இறுதி மரியாதையாவது தலைவர் பண்ணியிருக்கலாமே?’ என கேட்டதுக்கு “ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டியிருந்ததால சேலத்துக்கு வரமுடியலை. அதான் ட்விட் போட்டுட்டாரே? பாலசந்தருக்கு ஏற்கனவே ஹார்ட் பிரச்னை இருந்திருக்குது. கட்சி தலைமை மேலே எல்லாம் மன கஷ்டமில்லை.

kamal hassan...Boiling fans
Author
Tamil Nadu, First Published Jan 9, 2019, 2:57 PM IST

இனி என் வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் உங்களுக்காகத்தான்! நீங்கள் தந்த புகழ், செல்வாக்குக்காக உங்களை செல்ல நாய்க்குட்டியாக சுற்றிவந்து நன்றி சொல்வேன்!’ மக்களைப் பார்த்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எடுத்து விடும் டயலாக்குகள் இவை. 

ஆனால் அவரது ரசிகர் மன்றத்தினர் சிலரோ ‘அத்தனையும் டுமீலு! வெத்து சீன் போடுறார்’ என்கிறார்கள். சொந்த மன்றத்தினரே பாயுமளவுக்கு கமல் அப்படி என்னதான் பண்ணிவிட்டார்? என்று இறங்கி விசாரித்தால், சேலத்திலிருந்து பாலம் பாலமாக வெடிக்கிறது கமலின் வண்டவாளம். அதாவது, 1980ம் வருடத்திலிருந்து கமல்ஹாசனின் ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தை சேலம் மாவட்டத்தில் வளர்த்தவர் பாலசந்தர். இவரது மிகக் கடுமையான உழைப்பும், அதன் மூலம் அந்த மாவட்டத்தில் தனக்கு கிடைத்த எழுச்சியும் கமல்ஹாசனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் சில முறை தன்னோடு உட்கார்ந்து சாப்பிடுமளவுக்கு அங்கீகாரம் தந்திருக்கிறார். kamal hassan...Boiling fans

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஏனோ பாலசந்தரை அநியாயத்துக்கு ஒதுக்கிவிட்டார்களாம் கமல் தரப்பினர். அதிலும் கட்சி துவக்கிய பின் இவரை  மிகப்பெரிய அளவில் தவிர்த்திருக்கிறார்கள். ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் இருந்த பாலசந்தரை இந்த செயல் மிகக் கடுமையாய் மன ரீதியில் பாதித்ததாம். கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கமல். அப்போது அவரை நேரில் சந்தித்து  வருத்தப்படலாம் என்று நினைத்தபோது, சந்திப்புக்கே வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறார். kamal hassan...Boiling fans

இது அநியாயத்துக்கு பாலசந்தரின் மனதை புண்படுத்திவிட்டதாம். இந்நிலையில் சமீபத்தில் பாலசந்தர் இறந்துவிட்டார், அவர் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. தன் வளர்ச்சிக்காக எவ்வளவோ உழைத்த பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கமல் வருவார் என்று பாலசந்தரின் உறவினர்கள் கடைசி நொடி வரை எதிர்பார்த்து ஏமாந்தார்களாம். ஆனால் ட்விட்டரில் வருத்தம் காட்டி சில வரிகள் எழுதியிருக்கிறார் கமல். kamal hassan...Boiling fans

இந்நிலையில் கமல் கட்சியின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸிடம் போன் பண்ணி சிலர் ‘பாலசந்தருக்கு இறுதி மரியாதையாவது தலைவர் பண்ணியிருக்கலாமே?’ என கேட்டதுக்கு “ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டியிருந்ததால சேலத்துக்கு வரமுடியலை. அதான் ட்விட் போட்டுட்டாரே? பாலசந்தருக்கு ஏற்கனவே ஹார்ட் பிரச்னை இருந்திருக்குது. கட்சி தலைமை மேலே எல்லாம் மன கஷ்டமில்லை.” என்று சொல்ல அவர்கள் வெறுத்துப் போய்விட்டனராம்.

’முப்பது வருஷத்துக்கு மேலா தனக்காக உழைச்சவன் செத்ததுக்கு கமல் ட்விட்டு போட்ட மாதிரி, தேர்தல்ல அவருக்கான வாக்குகளையும் ரசிகர்கள் ட்விட்டர்ல தெரிவிச்சுட்டா போதும், ஜெயிச்சுடுவாரு போல கமல்.” என்று ரிவிட் வைக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios