உங்களுக்கு நீதி கிடைக்கும்! சத்யமேவ ஜெயதே! ராகுல் காந்திக்கு ஆதரவாக கமல் ட்வீட்
சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"ராகுல்ஜி, இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் அதிக சோதனை நேரங்களையும் நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானதுதான். சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!!" என்று கமல்ஹாசன் தன் டவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
மாதம் 84 ஆயிரம் சம்பளம் ரொம்ப கம்மி!பஞ்சாப் சட்டசபையில் எம்எல்ஏ பேச்சு!
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது திருடர்கள் அனைவருக்கும் பெயருக்குப் பின்னால் மோடி எனும் பெயர் உள்ளது என்று பேசினார். உதாரணமாக இந்தியாவில் ஊழல் செய்துவிட்டு நாட்டைவிட்டு ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டு இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்களோ என்றும் தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களை அவதூறு செய்வதாக பாஜகவினர் கருதினர். எனவே குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி ராகுல் பேச்சு தொடர்பாக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறு செய்வதாக இருப்பதாக தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் நிலுவகையில் இருந்த இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ராகுல் காந்தி தரப்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
16.8 கோடி பேரின் அந்தரங்க தகவல்களை திருடி விற்ற கும்பல் கைது! ஹைதராபாத் போலீஸ் அதிரட