அரசியலையும், தன் சினிமாவை போலவே நடத்திக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்! என்கிறார்கள் அவரை நன்கு தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள். அதாவது, கமல்ஹாசன் புதுப்படம் எடுக்கையில் அதில் வெறிகொண்டு விருப்பப்பட்டு  நடிகர், நடிகைகளும், டெக்னிஷியன்களும் இணைவார்களாம். ஆனால் ஷூட்டிங் போகப்போகத்தான்  கமலின் பரிசோதனை முயற்சிகள், அனுபவ கோபங்கள், எகத்தாளங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு ‘ஏண்டா இந்த ப்ராஜெக்ட்ல இணைஞ்சோம்?’ என்று நொந்து நூடுல்ஸ் ஆவார்களாம். 

அதேப்போல்தான் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இருக்கும் முக்கிய மற்றும் இரண்டாம் நிலை நிர்வாகிகள் இப்படித்தான் புலம்புவதாக கமலை அறிந்த நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். லைம் லைட்டில் இருக்க வேண்டும்! என்பதற்காக தன்னை சுற்றி எப்போதும் சர்ச்சை வைபரேஷன் விளக்கை எரிய விட்டுக் கொண்டே இருக்கும் கமல்ஹாசன், தன்னுடன் உள்ளவர்களையும் இம்சையில் சிக்கவிடுவதுதான் பிரச்னையே என்று தகவல் தடதடக்கிறது. 

அதாவது, இந்து தீவிரவாதி எனும் வார்த்தையை சொல்லி பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார் கமல்ஹாசன்.இதனால் ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் அவர் பொது இடங்களுக்கு செல்கையிலேயே ஆயிரத்தெட்டு எதிர்ப்புகளும், பிரச்னைகளும் வெடிக்கின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தன் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக தோப்பூர் எனுமிடத்துக்கு வந்திருந்தார். 

அப்போது கூட்டத்தில் இருந்த வயதான பெண்மணிகளை நோக்கி “இங்கே என்னை பார்க்க வந்திருக்கிற ஆத்தாக்கள் எனக்கு ஏழெட்டு தடவை ஃபிளையிங் கிஸ் (பறக்கும் முத்தம்) கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு என்னோட அன்பை தெரிவிச்சுக்கிறேன்.” என்று பேசிவிட்டார். 

இதில் ஆத்தாக்கள் சங்கடப்பட்டும், வெட்கத்திலும் நெளிந்து அமர்ந்துவிட்டனர். ஆனால் ஏரியாவின் சீனியர் ஆண்களோ, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளிடம் “பொது இடத்துல எப்படி பேசுறதுன்னே உங்க தலைவருக்கு தெரியாதா? வயசான கிராமத்து பொம்பளைங்க எல்லாம் ஒழுக்கத்தை பெருசா நினைக்கிறவங்க. அவங்க தனக்கு பறக்கும் முத்தம் கொடுக்குறதா இவரு பேசுறது அசிங்கம். இவரென்ன அவங்களுக்கு பேரனா? டை அடிச்சு, மேக் அப் போட்டிருக்கிற அறுபதை தாண்டிய கிழவன் தானே. இவருக்கு ஏன் அந்த ஆத்தாக்கள் முத்தம் கொடுக்கப்போறாங்க?

தராதரம் இல்லாமல், அரை குறை ஆடையிலிருக்கும் மகளுக்கே முத்தம் கொடுக்க முயன்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புத்தியெல்லாம் கமலுக்குதான் உண்டு. இவர் கட்சியில இருந்து ஏன் நீங்களும் உங்க தன் மானத்தை கெடுத்துக்குறீங்க?” என்று அசிங்கப்படுத்திவிட்டார்களாம். 
நொந்து கிடக்கிறார்கள் நிர்வாகிகள்.