மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும், கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது என அதிமுகவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.  

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களவை தேர்தலில் தனித்து நிற்பதற்கான காரணங்களை திரும்ப திரும்ப சொல்ல முடியாது. தகுதியின், அடிப்படையிலும், குறைந்த வயது, கல்வி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு இருக்கும் என்றார்.

 

மக்கள் நலன் என்பது தான், மக்கள் நீதி மையத்தின் இலக்கு. கடந்த ஒரு ஆண்டில் மக்கள் நீதி மய்யக் கட்சி வளர்ந்திருப்பதாக தெரிவித்தார். மக்களுடனான தொடர்பை தாம் அதிகப்படுத்தி இருப்பதாகவும் மக்கள் தன்னை ஆசிர்வதித்து அனுப்பியிருப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார். அரசியல் உதவாக்கரை உடைந்து மக்கள் பெருக்கெடுக்கும்போது குளம் வேறு, ஆறு வேறு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தனியே நிற்போம் என்று கூறியது நான் அல்ல நாம் என்றும் தெரிவித்தார். 

எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையைப் பிடித்து புத்துயிர் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மோதி( மோடி) என்கிற வார்த்தையை பயன்படுத்த நான் விரும்பவில்லை என்றும் காட்டமாக கூறினார்.