அரசியலை தாண்டி ஸ்டாலினுடன் நட்பு..! நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா..? கமல்ஹாசன் பரபரப்பு தகவல்

அரசியலை தாண்டி, எனக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நட்பு உள்ளதாக தெரிவித்த கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் சொல்லமுடியாது எனவும் சீன் பை சீன் ஆகதான் நகர்த்த வேண்டும். இப்போதே கிளைமேக்ஸ்க்கு செல்ல கூடாது என தெரிவித்தார்

Kamal Haasan inaugurated the photo exhibition of Chief Minister Stalin

திமுக நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையோட்டி ஆண்டு தோறும் திமுகவினரால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாளைய தினம் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை தொகுத்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகல்

Kamal Haasan inaugurated the photo exhibition of Chief Minister Stalin

படப்பிடிப்பை ஒத்திவைத்த கமல்

இதனையடுத்து  சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் தொடங்கிவைத்து புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போது புகைப்படத்தில் ரஜினி, கமல்ஹாசனோடு முதலமைச்சர் இருந்த புகைப்படங்கள், கருணாநிதியன் பழைய காலத்து புகைப்படங்களை கமல்ஹாசன் பார்த்து ரசித்தார். புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவின் போது அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இந்தியன் 2 பட பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தெரிவித்தவர், நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Kamal Haasan inaugurated the photo exhibition of Chief Minister Stalin

திமுகவுடன் கூட்டணியா.?

அரசியலை தாண்டி, எனக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நட்பு உள்ளதாக தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இப்போது எதுவும் சொல்ல முடியாது. சீன் பை சீன் ஆகதான் நகர்த்த வேண்டும். இப்போதே கிளைமேக்ஸ்க்கு செல்ல கூடாது என தெரிவித்தார். முன்னதாக புகைப்பட் கண்காட்சி பதிவேட்டில் எழுதிய கமல்ஹாசன், மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக, தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், சவாலையும், அனுபதவித்தவர், ஏற்றவர், அவரின் படிப்படியான உயர்வை படம் பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் என கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.  

இதையும் படியுங்கள்

கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த திமுக அமைச்சர்..! என்ன காரணம் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios