கமல் கோட்சேவை பேசியது போல வேறு மதத்தினரை பற்றி பேச முடியா என செண்பக மன்னார் கேள்வி எழுப்பினார். 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,“சுதந்திரம் பெற்று தந்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் மகாத்மா காந்தி மற்றும் சுபாஸ் சந்திரபோஸ். இதில் காந்தி அகிம்சை வழியை கையாண்டார். சுபாஷ் சந்திரபோஷ் ஆயுதம் போராடினார். இதனால் சுபாஷ் சந்திரபோசை தேசவிரோதி என்று சொல்லி விட முடியுமா சொல்லுங்கள். கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொன்னதால் தான்,  கோட்சே தேசபக்தர் என நான் கூறினேன். 

சகிப்பு தன்மையையும், பொறுமையும் தான் இந்து மதம் போதிக்கிறது. ஆனால் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. கிருஷ்ணர் பொறுமை பொறுமை என்று இருந்திருந்தால் மகாபாரத யுத்தமே நடந்திருக்காது. கோட்சே செய்தது சரி என்று நாங்கள் எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. கோட்சேவும் தேச பக்தர் என்று தான் கூறினோம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்க்கவில்லை. ஒரு சிலரை தான் நினைவில் வைத்து இருக்கிறோம்.

 

நான் ஒரு இந்து. இந்து மதத்திற்கு எதிராக கருத்துக்கள் யாரால் வந்தாலும் அது பற்றி கருத்தை தெரிவிப்பேன். மதத்தில் இந்துவாக இருந்து கொண்டே  இந்துக்களைப் பற்றி பலர் விரோதமாக பேசி வருகின்றனர். முன்பு பெரியார் கூட இந்து பெயரை வைத்து கொண்டு இந்து விரோதமாக தான் பேசினார். இப்போது மு.க.ஸ்டாலின் மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறார். ஆனால் தன் நெற்றியில் விபூதியை வைத்தால் உடனே அழிக்கிறார் ஸ்டாலின்.இதை தான் நாங்கள் சுட்டி காட்டுகிறோம். இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை” என கூறினார்.