kamal consult with his fans association administrators
கமலின் அரசியல் பிரவேசம் அண்மைக் காலமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது என்றே கூறலாம்.
அரசியலுக்கு வருவதும் தனிக்கட்சி தொடங்குவதும் உறுதி என கமல் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். கமலும் கமலின் அரசியல் பிரவேசமும் என்ற தலைப்புத்தான் தமிழகத்தின் பிரதான பேசுபொருளாக உள்ளது.
அரசியலுக்கு வருவதை உறுதியாகக் கூறிவிட்ட கமல், தேர்தல் அரசியல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசித்தார்.
இந்நிலையில், தற்போது சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்டந்தோறும் களப்பணிகளை மேற்கொள்வது, மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து அவற்றிற்கான தீர்வுகளை காண திட்டங்களை வகுப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எப்போது கமல் தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என்பதே அடுத்த கேள்வி..
