kalayar koil police file case against dinakaran and thirunavukkarasar

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குரு பூஜைவிழாவில் விதிகளை மீறி அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி மருது பாண்டியர் குரு பூஜை விழா, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான குரு பூஜை விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்க வரும் தலைவர்கள் அதிக வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அதிக பட்சமாக 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.

இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து மருது பாண்டியர் குரு பூஜையில் பங்கெற்றார்.

இதே போன்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கருணாஸ் எம்எல்ஏ உள்ளிட்ட அதிக வாகனங்களில் வந்தததாக கூறப்படுகிறது.

இதனையடுத்த மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் விதிகளை மீறி செயல்பட்டதாக தினகரன், திருநாவுக்கரசர், கருணாஸ் உள்ளிட்ட 68 பேர் மீது காளையார் கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.