Asianet News TamilAsianet News Tamil

Kalainger Unavagam : விரைவில் கலைஞர் உணவகங்கள்..! டெல்லியில் மீண்டும் உறுதிப்படுத்திய தமிழக அமைச்சர்.!

கலைஞர் உணவகம் என்ற பெயரில் சமுதாய உணவகங்கள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Kalainger Unavagam: Kalainger restaurants coming soon ..! Tamil Nadu Minister confirmed in Delhi.!
Author
Delhi, First Published Dec 22, 2021, 8:40 PM IST

தமிழகத்தில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 

கடந்த மாதம் டெல்லியில் மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, ‘தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் என்ற பெயரில் சமுதாய உணவகங்கள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கலைஞர் உணவகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மீண்டும் பேசியிருக்கிறார். நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர்  ஆர்.சக்கரபானி கலந்துகொண்டார்.

Kalainger Unavagam: Kalainger restaurants coming soon ..! Tamil Nadu Minister confirmed in Delhi.!

இக்கூட்டத்தில் சக்கரபாணி பேசுகையில், “அனைத்து மக்களுக்கும் சத்தான உணவு  வழங்கும்  திட்டங்களை செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக’ தமிழகம் திகழ்ந்து வருகிறது. அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி 2 கோடியே 15 லட்சம் கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ, 1161 கோடி மதிப்பீட்டில் 20 வகை உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன.  சமுகப் பாகுபாடு இல்லாமல் சுமார் 40 ஆண்டுகளாக  பொது விநியோகத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் 5 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது.

Kalainger Unavagam: Kalainger restaurants coming soon ..! Tamil Nadu Minister confirmed in Delhi.!

இதேபோல் கோயில் அன்னதான திட்டம் மூலம் தினமும் 66 அயிரம் பக்தர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 407 (அம்மா) உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சியில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் 4 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் 200 முதல் 400 பேருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்திட கலைஞர் உணவகம் என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்கள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சக்கரபாணி பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios