Asianet News TamilAsianet News Tamil

இனி சின்ன சின்ன செலவுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.. உழைக்கும் மகளிரும் கலைஞரின் உரிமைத் தொகையும்.!

சரியான வாழ்க்கை அமையாமல் வாழ்வின் விரக்திக்கு தள்ளப்பட்டுள்ள பெண்களுக்கு இந்த உதவித் தொகை புதிய தெம்பை ஏற்படுத்தும். இது போன்று பெண்களுக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவி சிறிதாக இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Kalaignar urimai thittam thogai: Working women and entitlement amount tvk
Author
First Published Sep 15, 2023, 8:08 AM IST | Last Updated Sep 15, 2023, 9:59 AM IST

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு மாஸ் திட்டங்களை  திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவி ஒருவருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. திமுக அறிவித்தபடி இந்த திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதையும் படிங்க;- kalaignar magalir urimai thittam: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: உரிமைப் பாதையில் உன்னத திட்டம்!

Kalaignar urimai thittam thogai: Working women and entitlement amount tvk

2023-24ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தால் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் பயனடைவர். 

தினமும் கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு  இந்த 1000 ரூபாய் பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும், சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கும், ஒரு வேலை சாப்பிடுவதற்கே அல்ல்படும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். எதுக்கு எடுத்தாலும் கை செலவுக்கு ஆண்களை எதிர்பார்க்காமல் பெண்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.  

இதையும் படிங்க;-  kalaignar magalir urimai thittam: பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்!!

Kalaignar urimai thittam thogai: Working women and entitlement amount tvk

சரியான வாழ்க்கை அமையாமல் வாழ்வின் விரக்திக்கு தள்ளப்பட்டுள்ள பெண்களுக்கு இந்த உதவித் தொகை புதிய தெம்பை ஏற்படுத்தும். இது போன்று பெண்களுக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவி சிறிதாக இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முக்கியமாக ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் இந்த ஆயிரம் ரூபாயில் வாங்கிக்கொள்ளலாம். இதே போன்று பல வகையிலும் தங்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள ஆயிரம் ரூபாய் உதவும் என்பதை மறுக்க முடியாது. குடும்பத் தலைவலிக்கு 1000 ரூபாய் வழங்கும் திமுக திட்டத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

உழைக்கும் மகளிர் தங்களது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள உதவும். யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துடன், உரிமைத் தொகையையும் இணைத்து தொழிலில் முதலீடு செய்யலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல பெண்களுக்கான உரிமைத் தொகை அமைந்து இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் இருந்தும் பாராட்டுக்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios