kalaignar magalir urimai thittam: பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்!!

பொருளாதர வளர்ச்சி மற்றும் விலை வாசி உயர்வு காரணத்தால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆயிரம் ரூபாய் குறைவான பணமாக தெரியலாம். மாதத்திற்கு ஆயிரம் என்று கணக்கிட்டால் குறைவு.. அதே பணத்தை 12 மாதங்கள் என்று கணக்கிட்டால் 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 

TN Empowers Women: Kalaignar magalir urimai scheme gives self-confidence to women kak

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும், தங்களது சொந்த காலில் நிற்க பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல சிறப்பான திட்டங்கள் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.  குறிப்பாக கட்டணமில்லா மகளிர் பேருந்து பயணத்திட்டம் மூலமாக பல்வேறு வகையிலான பணிகளுக்கு செல்லும் பெண்கள் மாதம் 756 ரூபாய் முதல் 1012 ரூபாய் வரை சேமிக்க முடிவதாக மாநில திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வறிக்கை கூறுகிறது. இதே போல பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் புதுமைப்பெண் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாணவிகளின் உயர்கல்வி உதவித் தொகை திட்டம்

புதுமைப்பெண் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி செல்லும் பெண்கள் தங்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தால் மாதம் மாதம் கிடைக்கும் 1000 ரூபாய் உதவி தொகையால் கல்வி சார்ந்த பொருட்களை வாங்கவும் உதவியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

இந்த நிலையில்தான் திமுகவின் அடுத்த அறிவிப்பு தான் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக அறிவித்தபடி இந்த திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துகிறது.  தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான  குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதையும் படிங்க;- kalaignar urimai thittam: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: உரிமைப் பாதையில் உன்னத திட்டம்!

2023-24ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்துள்ளார். 

யாருக்கெல்லாம் உதவி தொகை

நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். 

 

மகளிர் உரிமை தொகை- பெண்களுக்கான தன்னம்பிக்கை

உழைக்கும் ஆண்கள் ஈட்டும் ஊதியத்துக்கு நிகராக உரிமை தொகையுடன் களம் இறங்கும் குடும்பத் தலைவிகள், மாதம் ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில், ‌ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஈட்டுவார்கள். இதை வைத்து குடும்ப பட்ஜெட்டை சமாளிப்பார்கள். ஆண்டுக்கு 12 ஆயிரம் வரை கிடைக்கும் இந்தப் பணத்தில் தங்களால் பல சிக்கல்களையும் சமாளித்து தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். 

பூக்கட்டும் பெண் ஒருவர் கூறுகையில், ''ஆயிரம் ரூபாய் உதவி தொகை மூலம் கூடுதலாக பூக்கள் வாங்கி பூ வியாபரத்தை அதிகரிக்க முடியும். ஆயிரம் ரூபாய்க்கு பூ வாங்கி விற்றால் அதன் மூலம் கிடைக்கும் 500 ரூபாய் லாபத்தை வைத்து அடுத்தடுத்து வருமானத்தை அதிகரிக்க முடியும்'' என்கிறார்.

இதே போல மீன் விற்கும் பெண் வியாபாரி ஒருவர் கூறுகையில், ''பெண்கள் ஆயிரம் ரூபாய்க்கு மீன்களை விற்று கூடுதலாக கிடைக்கும் 1000 ரூபாய் லாபத்தைக் கொண்டு தங்களது தொழிலை விரிவாக்க முடியும். மேலும் குடும்பத்தலைவிகள் மாதாந்திர சிறிய செலவுகளுக்கு யாரையும் நம்பி இருக்க வேண்டிய நிலை இல்லை. தன்னம்பிக்கையோடு தனித்து நிற்க ஆயிரம் ரூபாய் உதவியாக இருக்கும்'' என்று கூறுகிறார்.

இதையும் படிங்க;- இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்க தகுதி பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

ஆயிரம் ரூபாயை வைத்து என்னவெல்லாம் வாங்கலாம்.?

''ஒரு குடும்பத்திற்கு தேவையான 25 கிலோ மூட்டை அரிசி வாங்கலாம். குழந்தைகளுக்கான பள்ளி அல்லது டியூசன் கட்டணம் செலுத்தலாம். சிலிண்டர் வாங்கலாம். மாதந்திர மருத்துவ செலவுக்கு பயன்படுத்தலாம். வாகனங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் போடலாம்.  முக்கியமாக ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கலாம்'' என்கிறார் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண். 

ஆயிரம் ரூபாய் குறைவான தொகையா.?

பொருளாதர வளர்ச்சி மற்றும் விலை வாசி உயர்வு காரணத்தால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆயிரம் ரூபாய் குறைவான பணமாக தெரியலாம். மாதத்திற்கு ஆயிரம் என்று கணக்கிட்டால் குறைவு.. அதே பணத்தை 12 மாதங்கள் என்று கணக்கிட்டால் 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் தங்களது குடும்பங்களுக்கு தேவையான நகை, புத்தாடைகள் போன்றவற்றை வாங்குவது மட்டுமில்லாமல் அத்தியாவசிய செலவுக்கு யாரையும் நம்பி இருக்க வேண்டிய நிலை இல்லை. பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழலாம் என மகளிர் உரிமை தொகை பெற உள்ள பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம், வறுமை பாதியாக குறைத்திட  வாய்ப்பு உண்டு என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios