kalaignar karunanidhi celebrate his wife birthday

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சிஐடி காலனியிலுள்ள தனது வீட்டில் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். கருணாநிதியின் உடல்நிலையில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 3ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் திமுகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களையும் சந்தித்தார். சில தினங்களுக்கு முன்பு தனது மகன் மு.க.தமிழரசு இல்லத்துக்குச் சென்ற கருணாநிதி, மறுநாள் காலையில் கோபாலபுரம் இல்லத்திற்குத் திரும்பினார்.

முதுமையின் காரணமாக ஓய்வெடுத்து வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் முரசொலி பவள விழா அரங்கம், அண்ணா அறிவாலயம், சிஐடி காலனி இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்த கருணாநிதி. தனது கொள்ளு பேரனான மு.க.தமிழரசுவின் பேரனுடன் விளையாடினார்.

இந்நிலையில், நேற்று கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்குப் பிறந்த நாள் என்பதால் திமுகவில் இருந்தும், வெளியில் இருந்தும் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சிஐடி காலனி வீட்டுக்குச் சென்றார். ராஜாத்தி அம்மாள் கருணாநிதிக்கு மாலை அணிவித்து அவர். பின் ராஜாத்தி அம்மாளின் பிறந்த நாளை ஒட்டி கேக் கொண்டுவரப்பட்டது.

ராஜாத்தி அம்மாள் கருணாநிதியின் காதில், ‘இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் கேக் வெட்டுங்க’ என சொல்ல மெல்ல சிரித்தபடியே கேக்கை வெட்டினார். எப்போதாவது கோபாலபுரத்திலிருந்து வெளியில் சென்று வந்த கருணாநிதி, தற்போது தொடர்ந்து கோபாலபுரத்திலிருந்து வெளியே பல இடங்களுக்குச் சென்று வருவது திமுக தொண்டர்களிடையே பழைய உற்சாகத்தை பார்க்க முடிகிறது.