Asianet News TamilAsianet News Tamil

நாளைக்கு தலையை காணோம், கையை காணோம் எங்களை தேடி வராதீங்க.. காடுவெட்டி குருமகன் மிரட்டும் வீடியோ.!

தயவுசெய்து என் கண்ணில் மாட்டிக்காதீங்க.. அவ்ளோதான் நான் சொல்லுவேன். எல்லாரும் ஒரு மைக் கிடைச்சதுக்காக, யாரை விமர்சனம் செய்கிறோம். என்ன விமர்சனம் செய்கிறோம் என்பதே தெரியாமல், உங்க இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி பேசறீங்களே, நாளைக்கு இதன் விளைவுகள் உங்களுக்கு வந்தால், அப்போ உங்களால சமாளிக்க முடியுமா?

kaduvetti guru son  Intimidating video
Author
Tamil Nadu, First Published Nov 23, 2021, 7:05 AM IST

நாளைக்கு அப்பறம் ஒரு தலையை காணோம், கையை காணோம். காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க என காடுவெட்டி குருமகன் கனலரசன் மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.  இந்த திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. அதே அளவுக்கு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறினர். இதனையத்து, அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. சூர்யாவுக்கு ஆதரவாக குரல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 

kaduvetti guru son  Intimidating video

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களும்  பாமக நிறுவனர் ராமதாஸ் தான் காரணம், வன்னியர்கள் புண்பட்டுள்ளதாக கூறுவதற்கு ராமதாசும், பாமகவும்தான் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தின் பிரதிநிதியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

kaduvetti guru son  Intimidating video

இந்த படத்தில் 10 நொடிகளுக்கு ஒரு காலண்டர் வைத்து விட்டதால் வன்னியர் சமூகம் காயப்பட்டு விட்டது என கூறுகிறார்கள் அது அபத்தாமக இல்லையா.? அதேபோல், அந்தோணி சாமி பாத்திரத்திற்கு ஏன் குரு என பெயர் வைத்தீர்கள் என கேட்கிறீர்கள், அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என பெயர் வைத்தால் என்ன தவறு இருக்க முடியும், காலம் சென்ற குரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அந்தமான் சிறையில் இருந்தவரா? அல்லது மொழி போருக்காக உண்ணாவிரதமிருந்து சொத்துக்களை இழந்தாரா? சவுக்கு சங்கர் ஆவேசமாக பேசியிந்தார். சவுக்கு சங்கருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில்  காடுவெட்டி குருமகன் கனலரசன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

kaduvetti guru son  Intimidating video

அதில், பெரிய ஞானியா சவுக்கு சங்கர். தயவுசெய்து என் கண்ணில் மாட்டிக்காதீங்க.. அவ்ளோதான் நான் சொல்லுவேன். எல்லாரும் ஒரு மைக் கிடைச்சதுக்காக, யாரை விமர்சனம் செய்கிறோம். என்ன விமர்சனம் செய்கிறோம் என்பதே தெரியாமல், உங்க இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி பேசறீங்களே, நாளைக்கு இதன் விளைவுகள் உங்களுக்கு வந்தால், அப்போ உங்களால சமாளிக்க முடியுமா? இன்னைக்கு காடுவெட்டியாரை நேசிக்கிற, காடுவெட்டியாரின் தீவிர விசுவாசிகள் லட்சக்கணக்கான பேர் வெளியில் இருக்காங்க.

 

நாளைக்கு அப்பறம் ஒரு தலையை காணோம், கையை காணோம். காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க.. காவல்துறைக்கும் அதைதான் நாங்க சொல்றோம். நாளைக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்ததுன்னா, எங்களை தேடி யாரும் வரவேணாம். ஏன்னா, நீங்க பேசற பேச்சு அப்படி இருக்கு" என்று வீடியோ முழுக்க மிரட்டல் விடுக்கும் பகையிலேயே உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios