அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து.. நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அதிரடி தீர்ப்பு

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடர்ப்பட்ட வழக்கில் ஐ.பெரியசாமியை  சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். 

Justice Anand Venkatesan set aside the order acquitting minister I Periyasamy in the corruption complaint KAK

அமைச்சர் ஐ .பெரியசாமி மீது புகார்

கடந்த திமுக ஆட்சி காலமான  2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், ஐ பெரியசாமி, இவர் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை எம்எல்ஏ, எம்பிகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தானாக முன் வந்து விசாரணை நடத்தினார். இதற்கு அமைச்சர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தீர்ப்பு அளித்தார். அதில் வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செயார்.

மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டவர்,  மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் அறிவிறுத்தினார். வழக்கு விசாரணையை 2024 ஜூலைக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அறிவிறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுகவிற்கு குட்பாய்... பாஜக கூட்டணியில் இணைந்த ஜி.கே.வாசன்- மோடி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios