சீன அதிபர் வெளியே கிளம்பிய நேரம்.... சைதாப்பேட்டை மேம்பாலம் எப்படி இருக்குனு பாருங்க..!

சென்னை கிண்டியில் உள்ள ஐ டி சி நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள சீன அதிபர் தற்போது மாமல்லபுரம் சென்றடைந்தார். அவரை பிரதமர் நரேந்தர மோடி மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு என்ற பகுதியில் வரவேற்று, மாமல்லபுர சிற்ப கலைகளை பற்றியும், ஐந்து ரதம் பற்றியும்  விளக்கமளித்தார் 

முன்னதாக பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் சீன அதிபர் சென்னை வந்ததடைந்தார். அவரை எடப்பாடி பழனிச்சாமி, ஒ பன்னீர் செல்வம், ஆளுநர் விமான நிலையம் சென்று  பூங்கொத்து கொடுத்து, தமிழக அரசு சார்பில் ஆடல் பாடல் என பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். 

குறிப்பாக பாரம்பரியமான பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், இசை வாத்தியங்கள் முழுங்க  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிண்டியில் இருக்கும் ஐடிசி ஹோட்டலில் ஓய்வெடுக்க சென்றார். பின்னர ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் கிளம்பும் போது மவுண்ட் ரோட், சைதாப்பேட்டை மேம்பாலம்  உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!