Just live me said by thambidurai

குடியரசு தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் அதிமுகஅணிகளிடையே பெரிய சொற் போரே நடந்து வருகிறது.

பாஜக தரப்பில் பீகார் ஆளுநராக பதவி வகித்து வந்த ராம்நாத்கொவிந்த் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராகநிறுத்தபட்டுள்ளார். காங்கிரஸ் தரப்பில் முன்னாள் சபாநாயகர்மீராக்குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைதொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் தரப்புக்கு திமுக உள்ளிட்டஎதிர்கட்சிகளும் பாஜக தரப்புக்கு அதிமுகவை சேர்ந்த எடப்பாடிஅணியும், பன்னீர்செல்வம் அணியும், டிடிவி அணியும் ஆதரவுதருவதாக தெரிவித்தனர்.

எடப்பாடி அணி ஆதரவு தெரிவிப்பதற்கு முந்தைய தினம் மக்களவைதுணை சபாநாயகர் தம்பிதுரை பெங்களூர் சிறையில் உள்ளசசிகலாவை சென்று சந்தித்து பேசி வந்தார்.

மேலும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த ஆலோசனைகூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்ட்த்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக எடப்பாடி தன்னிச்சையாக அறிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, சசிகலா ஆலோசனையின் பேரிலேயே அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் பாஜகவேட்பாளரை ஆதரிப்பதாக பேட்டியளித்தார்.

இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. தம்பிதுரையின் கருத்து அவரது சொந்த கருத்து என்று எடப்பாடி தரப்பினர் பேட்டியளித்தனர்.

பேட்டியளித்தவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று தினகரன் தர்ப்பு வெற்றிவேல் முதல்வர் எடப்பாடிக்கு பகிரங்க சவால் விடுத்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, கட்சி தலைமை கழகம் தான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதை முடிவு செய்ததாகவும், இதற்கு மேல் தகவல் வேண்டுமென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தான் நீங்கள் கேட்க வேண்டும் என எஸ்கேப் ஆனார்.