அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு.. வெல்லப்போவது யார்..? உச்சகட்ட அலர்டில் ஓபிஎஸ்- இபிஎஸ்

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. 
 

Judgment in AIADMK general committee case tomorrow..

முன்னதாக ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். 

மேலும் படிக்க:குஜராத் தான் முதலிடம்.. போதைப் பொருள் பரவலுக்கு மத்திய அரசு தான் காரணம்.. அமைச்சர் பொன்முடி விளாசல்

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவானது கடந்த 25 ஆம் தேதி நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், நர்மதா சம்பத் ஆகியோர் வாதிட்டனர். 

மேலும் படிக்க:கார்த்தி சிதம்பரம் அண்ணாமலை சிரித்தபடி செல்பி.. காங் தொண்டர்களை கதிகலங்க வைக்கும் போட்டோ.. என்னங்க நடக்குது.??

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி, வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios